ETV Bharat / bharat

தடைகளை உடைத்தெறிந்த மம்தா... பலனளித்த 'வீல் சேர்' வியூகம்

author img

By

Published : May 2, 2021, 1:03 PM IST

Updated : May 2, 2021, 1:16 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மம்தாவின் திருணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Mamata Banerjee
மம்தா

மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. திருணாமூல், பாஜக மற்றும் இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணிகளுக்கிடையே இடையே அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வந்தபடியே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர போவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அங்கு கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்பின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கு வங்கத்தை கைப்பற்ற வேண்டுமென பாஜக, தொடர் முயற்சியில் ஈடுபட்டது. பணபலம், ஆள்பலம் என அனைத்து வியூகங்களையும் பாஜக கையாண்ட நிலையில், மம்தா ஒற்றை மனிதராக மாநிலம் முழுவதும் வீல்சேரிலேயே பரப்புரை மேற்கொண்டார். தற்போது வெளியாகியிருக்கும் முன்னிலை நிலவரங்கள், உண்மையாகும் பட்சத்தில் அவர் வீல்சேரில் பரப்புரை செய்தது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.

அதே போல், இடதுசாரி காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவிருந்த சிறுபான்மையினர் வாக்குகள் முழுவதும் திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. நகர்புறங்கள், மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு கடும் போட்டியே நிலவி வருகிறது.

மம்தா, தனக்கு சாதகமான தொகுதியில் போட்டியிடாமல் பாஜகவின் சுவேந்து அதிகாரியின் கோட்டையான நந்திகிராம் தொகுதியில் களம் கண்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியை விட சுமார் 7 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று அவர் பின்னடவை சந்தித்துள்ளார். ஆனால், வாக்கு எண்ண இன்னும் நிறைய சுற்றுகள் மீதமுள்ளன. எனவே, அங்கு கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு ஆதரவாகவே அங்கு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் எட்டு கட்டங்களாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இப்படி, பல சவால்களை மீறி சுமார் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திருணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Last Updated : May 2, 2021, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.