ETV Bharat / bharat

'மேற்கு வங்கத்தை வலுவாக்க லட்சியத்தை நோக்கிய நமது பயணம் தொடரும்' - மம்தா பானர்ஜி - கொல்கத்தா செய்திகள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை வலுவாக்க, மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் லட்சியத்தை நோக்கிய தங்களது பயணம் தொடருமென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

TMC celebrates foundation day, Mamata vows to continue her fight for people
“மேற்கு வங்கத்தை வலுவாக்க லட்சியத்தை நோக்கிய நமது பயணம் தொடரும்” - மம்தா பானர்ஜி
author img

By

Published : Jan 1, 2021, 4:27 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) 23ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (ஜன. 01) மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் நிகழ்வுகளை நடத்திவருகின்றனர். டி.எம்.சி.யின் மாநிலத் தலைமையகத்தில் அதன் மூத்தத் தலைவர்கள் கொடியை ஏற்றினர்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, “இன்று (ஜன. 01) 23ஆவது ஆண்டு தொடக்க விழாவைக் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) அரசியல் பயணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஜனவரி 1, 1998 அன்று தொடங்கிய இந்தப் பயணம் இந்நேரம் வரை பெரும் போராட்டத்திற்கு இடையில்தான் தொடர்கிறது. மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் லட்சியத்தை நோக்கிய திரிணாமுல் காங்கிரசின் அரசியல் பயணம் தொடரும்.

TMC celebrates foundation day, Mamata vows to continue her fight for people
மேற்கு வங்கத்தை வலுவாக்க லட்சியத்தை நோக்கிய நமது பயணம் தொடரும்” - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தை மேம்படுத்த வேண்டுமென ஒவ்வொரு நாளும் பணியாற்றிவரும் அனைத்து தொண்டர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளான இன்று எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரிணாமுல் குடும்பமானது, இந்தத் தீர்மானத்தை வரவிருக்கும் காலங்களிலும் தொடரும்” எனக் கூறினார்.

  • On #TMCFoundationDay, I extend my sincere gratitude to our Maa-Mati-Manush and all our workers who continue to fight with us in making Bengal better and stronger each day.

    The Trinamool family will carry on with this resolve for times to come! (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மாநிலத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கப்படுத்தி பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை டி.எம்.சி. தலைவர்கள் ஏற்பாடுசெய்துள்ளனர். எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நாளை 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.