ETV Bharat / bharat

லஞ்சப் புகாரில் என்ன நடவடிக்கை? மஹுவா மொய்த்ராவுக்கு மம்தா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Mahua Moitra appoints Krishnanagar district president : லஞ்சப் புகார் விவகாரத்தில் மக்களவையி இருந்து இடை நீக்கம் செய்ய நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்பித்து உள்ளதாக தகவல் கூறப்படும் நிலையில் மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மாவட்ட தலைவராக மஹுவா மொய்த்ரா எம்.பி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 7:42 PM IST

கொல்கத்தா : லஞ்சப் புகாரில் சிக்கி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணாநகர் வடக்கு நாடியா மாவட்டத் தலைவராக நியமித்து தனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

  • Thank you @MamataOfficial and @AITCofficial for appointing me District President of Krishnanagar (Nadia North) .
    Will always work with the party for the people of Krishnanagar.

    — Mahua Moitra (@MahuaMoitra) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவையில் எழுப்பிய 60 கேள்விகளில் 50க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், அதில் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் வாங்கியதாகவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதினார். அதேநேரம், பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகார் கடிதத்தை மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர் ஓம் பிர்லா அது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் நேரில் ஆஜராம்கி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் வினோத் குமார் சோன்கர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடந்த வாரம் சமர்பித்தார்.

லஞ்சப் புகாரில் மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்ய, மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. லஞ்சப் புகார் விவகாரத்தில் மக்களவையில் இருந்து நீக்கம் செய்வதற்கான பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு கிருஷ்ணாநகர் மாவட்டத்திற்கு தலைவராக மஹுவா மொய்த்ராவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமித்து உள்ளார். அதேநேரம் கிருஷ்ணாநகர் மாவட்டத்திற்கு கல்லோல் கான் பொறுப்பு ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இங்கிலாந்து அரசியலில் அடுத்தடுத்த மாற்றம்! சுயெல்லா பதவி நீக்கத்திற்கு இதுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.