ETV Bharat / bharat

திருப்பதி இடைத்தேர்தல்: போலி வாக்காளர்கள் ஊடுருவல்,  ஜனநாயகம் கேலிக்கூத்தானது - திருப்பதி இடைத்தேர்தல்

திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வந்த ஏராளமான போலி வாக்காளர்கள் மற்றும் மோசடி பேர்வழிகளை பாஜக, ஜனசேனா கட்சித் தலைவர்கள், முகவர்கள் ஆதாரங்களுடன் பிடித்தனர்.

Tirupati Bypoll
திருப்பதி இடைத்தேர்தல்
author img

By

Published : Apr 18, 2021, 7:26 PM IST

திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. மக்களவை இடைத்தேர்தல் வாக்கெடுப்பின் போது, ​​போலி வாக்காளர்கள் வாக்குகளை அளித்தனர். போலி வாக்காளர்கள் வெளியில் இருந்து தனியார் வாகனங்களில் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டனர். போலி வாக்காளர்கள் காரணமாக, உண்மையில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க முடியவில்லை. இந்த மோசமான திட்டத்திற்கு பின்னால் ஆளும் YSRCP இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது. தெலுங்கு தேசம்,பாஜக இடைத்தேர்தல் வாக்குப்பதிவை ரத்து செய்து மீண்டும் தேர்தலை நடத்தக் கோரியுள்ளன.

  • காலையில் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையாக நிற்கின்றனர்.
  • வாக்காளர் அட்டைகள் அனைவரின் கைகளிலும் உள்ளன.
  • மக்கள் முறையாக வாக்களிக்க வந்ததாகத் தெரிகிறது.
  • ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் உண்மையான வாக்காளர்கள் அல்ல. திருப்பதியில் வாக்களிப்பதற்காக சித்தூர் மற்றும் கடப்பா பகுதிகளிலிருந்து வந்தவர்கள் !
  • வரிசையில் இருப்பவர்களுக்கு அவர்களின் பெயர் தெரியாது, முகவரி, தந்தையின் பெயர், கணவரின் பெயர்கள் சொல்ல முடியாது.
  • வாக்களிக்க நாம் வாக்குச் சாவடிக்குச் சென்றால், நமது வாக்கை யாரோ ஒருவர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்.
  • தேர்தல் நடத்தை நடைமுறையில் உள்ள திருப்பதி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மற்றும் கார்களில் கூடினர்.
  • வாக்காளர் சீட்டுகள், அடையாள அட்டைகள் அனைவரிடமும் இருந்தது.
  • அதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டால், அவர்கள் யாத்திரைக்காக வந்திருப்பதாக சொன்னார்கள்.

திருப்பதி இடைத்தேர்தலில் இன்று அதிகாலை முதல் காணப்பட்ட காட்சிகள் இவை. ஏராளமான போலி வாக்காளர்கள் வாக்களித்து ஜனநாயகத்தை கேலி செய்தனர். நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்கள் திருப்பதிக்கு படையெடுத்தனர். திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வந்த ஏராளமான போலி வாக்காளர்கள் மற்றும் மோசடி பேர்வழிகளை பாஜக, ஜனசேனா கட்சித் தலைவர்கள், முகவர்கள் ஆதாரங்களுடன் பிடித்தனர்.

போலி வாக்காளர்கள் ஊடுருவல்

இன்று காலை, புற்றீசல் போல ஏராளமான போலி வாக்காளர்கள் வெளியே வந்தனர். வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதால் அவர்கள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் வாக்களித்தனர். ஆனால் அவை போலியானவை. கரோனா காரணமாக, எல்லோரும் முகமூடிகளை அணிந்து வந்தனர், வாக்குப்பதிவு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் அதனை அவ்வளவாக ஆட்சேபிக்கவில்லை. சித்தூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் கடப்பா மாவட்டங்களைச் சேர்ந்த போலி வாக்காளர்கள் நகரம் முழுவதும் பரவியிருந்தனர். உள்ளூர் தலைவர்களால் அவர்கள் பிடிக்கப்பட்டபோது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர்களைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை. அந்த போலி வாக்காளர்கள் பிடிபட்டு, தப்பித்த பல வீடியோக்கள் இன்று வைரலாக உள்ளது.

முன் திட்டத்துடன் அரங்கேறியுள்ளது

ஆளும் கட்சியான YCP, போலி வாக்காளர்களை ஒரு திட்டத்துடன் கையாண்டதாக தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க குற்றம் சாட்டின. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு உத்தியின் ஒரு பகுதியாக, அசல் வாக்காளர் அட்டைகளைப் போலவே போலி அடையாள அட்டைகளும் உருவாக்கப்பட்டன. மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் பின்னால், அவர்கள் செல்ல வேண்டிய வாக்குச் சாவடியை குறிப்பிடும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இவை வெளியில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த போலி வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளை அடைவதற்கு வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தனர். சில பெண்கள் தாங்கள் போலி வாக்களிக்க வந்ததாக ஒப்புக்கொண்டனர். போலி வாக்காளர்களை ஏற்றிச் செல்லும் நான்கு தனியார் பேருந்துகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கையும் களவுமாக பிடிபட்டனர்

இந்தப் போலி வாக்காளர்கள் எதிர்கட்சியினரால் பிடிக்கப்பட்டனர். முன்னாள் மத்திய மந்திரியான தெலுங்கு தேசம் வேட்பாளர் பனபகா லக்ஷ்மி திருப்பதியில் 47ஆவது டிவிசனில் சில போலி வாக்காளர்களைக் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

பாஜக வேட்பாளர் ரத்னா பிரபாவும் அவர்களில் சிலரை கண்டுபிடித்தார். அவர்களை கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் காவல் நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். தனியார் பேருந்துகள் மற்றும் கார்களில் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த போலி வாக்காளர்களை தெலுங்கு தலைவர்கள் அடையாளம் கண்டு அவர்களை பிடித்தனர். அவர்களில் யாரும் சரியாக பதிலளிக்க முடியவில்லை.

தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை

திருப்பதித் தேர்தலை ஆளும் கட்சியான YCP கேலிக்கூத்தாகியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு பஞ்சாயத் ராஜ் அமைச்சர் பெட்டி ரெட்டி ராம்காத்ரா ரெட்டி தான் காரணம் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலர் குற்றம் சாட்டினர். அமைச்சருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதி வாக்குப்பதிவை ரத்து செய்யுமாறு கேட்டு சந்திரபாபு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜக தலைமையும், வாக்குப்பதிவை ரத்து செய்யக் கோருகிறது. திருப்பதி தேர்தலில் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிந்தா மோகன் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலையீடு - கும்பமேளாவை முடித்துக் கொள்வதாக அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.