ETV Bharat / bharat

இந்திய அளவில் திருப்பதிக்கு 2ஆம் இடம்.. எதில் தெரியுமா.?

இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2ஆவது இடத்தில் உள்ளது.

irumala is the second most visited temple by devotees

author img

By

Published : Dec 27, 2022, 11:38 AM IST

திருப்பதி: விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதனால், திருப்பதியை வைணவ பக்தர்கள் பல தலைமுறைகளாக ஆன்மிக தலமாக நிர்வகித்துவந்தனர்.

காலப்போக்கில் கோயில் வளாகம் 16.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்தது. இப்போது திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்த கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசன டிக்கெட், காணிக்கை, லட்டு விற்பனை என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருப்பதி ஏழுமையான் கோயில், இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் ஓயோ கலாச்சார பயண அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் கூற்றுப்படி, வாரணாசி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

திருப்பதி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2021ஆம் ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்தாண்டு தளர்த்தப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதி தரிசன முன்பதிவு கடந்த ஆண்டை விட 233 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் ஷீரடி 3ஆவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Bodh Mahotsav: கரோனா பரவலுக்கு மத்தியில் பீகாருக்கு படையெடுக்கும் 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.