நியூயார்க்: அமெரிக்க நாளிதழான டைம்ஸ் ஆண்டுதோறும் மிகவும் பிரபலமான, செல்வாக்கான நபரைத் தேர்ந்தெடுத்து 'பெர்சன் ஆஃப் தி இயர்' என்ற விருதை வழங்கிவருகிறது. இந்த விருதானது கடந்த ஆண்டின் பரபரப்பாகப் பேசப்பட்ட - அதிக துணிச்சலான முடிவுகளை எடுத்த நபரைத் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பெர்சன் ஆஃப் தி இயர்-2021 டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கிற்கு வழங்கப்படுகிறது.
எலான் மாஸ்க்
உலகின் பெரிய தொழிலதிபர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் எலான் மஸ்க், இவரின் டெஸ்லா நிறுவனம் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாகும். எலான் மஸ்கை 'கிளவுன், ஜீனியஸ்' என வர்த்தக உலகில் பலவாறு அழைக்கின்றனர். அமெரிக்க நாளிதழ் டைம்ஸ் 2021ஆம் ஆண்டுக்கான, 'பெர்சன் ஆஃப் தி இயர்-2021' விருதை எலான் மஸ்க் பெறுகிறார்.
இந்நிறுவனம் அமேசான் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக நெட் மதிப்பைப் பெற்று ஒட்டுமொத்தாமாக 300 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளது. டெஸ்லா நிறுவன பங்குகளில் 17 விழுக்காடு இவரின் தனிப்பட்டதாகும்.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு கட்டத்தில் இதன் மதிப்பு சந்தையில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
மஸ்கிற்கு ஒரு செழிப்பான ட்விட்டர் கணக்கு உள்ளது, 66 மில்லியன் ஆட்கள் பாலோயர்களாக உள்ளனர். மஸ்க் ட்விட்டர் மூலம் அரசுக்கு பல சவால்விடும் வகையில் பல பதிவுகள் போடுவார். இவரது கணக்குதான் உலகில் அதிகம் பேரால் பின்பற்றப்படுகிறது.
இதையும் படிங்க: ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகிறார் இந்தியர் பராக் அகர்வால்