ETV Bharat / bharat

சிமெண்ட் குழாயில் கிடந்த புலியின் உடல்.. மரணத்தில் சந்தேகம்..

author img

By

Published : Feb 14, 2023, 7:23 PM IST

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் சிமெண்ட் குழாயில் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் குழாயில் கிடந்த புலியின் உடல்
சிமெண்ட் குழாயில் கிடந்த புலியின் உடல்

தும்கூரு: கர்நாடக மாநிலம் தும்கூருவின் அங்கசந்திரா வனப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் குழாய் உள்ளே புலியின் உடல் கிடந்துள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் தும்கூரு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், வனத்துறை அலுவலர்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து புலியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து வனத்துறை தரப்பில், "அங்கசந்திரா வனப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதாக எந்த தகவலும் வந்தில்லை. முதல்முறையாக 4 நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையிலேயே புலியின் உடல் கிடைத்துள்ளது.

இந்த புலிக்கு 4 வயது இருக்கும். முகத்திலோ, உடலிலோ காயங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. பத்ரா புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த மருத்துவர் குழு புலியின் உடற்கூராய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவிலேயே உயிரிழப்புக்கான காரணம் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் உள்ள சூரிக்காடு கிராமத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய புலி 2 பேரை வேட்டையாடியது. இதனால் சூரிக்காடு கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கினர். குடகு மாவட்ட வனத்துறையினரும் 8 பேர் கொண்ட 4 குழுக்களை அமைத்து புலியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில் இன்று (பிப். 14) புலி மயக்க ஊசி செலுத்தப்பட்டு வனத்துறையிடம் பிடிப்பட்டது. இந்த புலியை வனப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு திரும்பிய சுயநினைவு.. சிகிச்சைக்கான பணத்தை திரும்பக்கேட்டு ஆர்ப்பாட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.