ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சித்ராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைந்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுக்காப்பு படையினர் சம்பவிடத்துக்கு விரைந்த தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த மினி லாரியை கண்டு அருகில் சென்றனர்.
அப்போது வாகனத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிக்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது அடையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உதம்பூர் மாவட்டத்தில் 15 கிலோ கொண்ட வெடிகுண்டு சாதனத்தை காஷ்மீர் போலீசார் செயலிழக்கச் செய்ததைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல - போலீஸ் விளக்கம்