ETV Bharat / bharat

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகள்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்

ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளிச் சுற்றுலாவிற்காக சென்ற மூன்று மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிச் சுற்றுலாவிற்காக சென்ற மூன்று மாணவிகள் ஆற்றில் அடித்துச் சென்று பலி

author img

By

Published : Sep 28, 2022, 6:33 AM IST

ஆந்திரப் பிரதேசம்: பாபட்லா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சகிலேறு ஆற்றில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14), சுவர்ண கமலா(14), கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைத் தேடத் தொடங்கினர். காவல்துறையினர் தேடலில் இரண்டு மாணவிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாணவிகளின் பெற்றோர்களுக்கு எந்தவித தகவலும் பள்ளி நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை. ஊடகங்கள் வாயிலாக தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் பள்ளி பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காலை 10 மணிக்கே நடந்த விபத்து குறித்து பெற்றோர்களுக்கு ஏன் பள்ளி நிர்வாகம் தகவலளிக்கவில்லை என இறந்த மாணவிகளின் சொந்தங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.