சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கன்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் IED வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முதலில் நேற்று மத்தியம் 12 மணி அளவில் நடத்திய தாக்குதலில் ஜவான் சூரேந்திரா காயமடைந்தார். அவர் ராய்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஐந்து மணி நேரம் கழித்து மாலை வேளையில், அதே பகுதியில் மீண்டும் நக்சல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யோகேந்திரா மற்றும் சங்கர் என்ற இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த சம்பவயிடத்திலிருந்து நக்சல்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் சலப் குமார் சின்ஹா தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். குற்றச்செயலில் ஈடுபட்டோர் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரோ தலைவராக சோம்நாத் பதவியேற்பு