ETV Bharat / bharat

"அது எப்படி என்னை பார்த்து குரைக்கலாம்"... நாயுடன் உரிமையாளர் குடும்பத்தையே இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்...

தன்னை பார்த்து குரைத்த நாயையும் அதன் உரிமையாளரின் குடும்பத்தையும் இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Three injured in tiff over pet dog in west Delhi

author img

By

Published : Jul 4, 2022, 3:50 PM IST

டெல்லி: பாஸ்சிம் விகார் பகுதியில் வசிக்கும் ரக்ஷித்(25) என்பவர் நாய் ஒன்றை வளர்த்துவந்தார். இந்த நாய் நேற்று (ஜூலை 4) வெளியே சுற்றும்போது, பக்கத்து பிளாக்கில் வசிக்கும் தரம்வீர் தகியா என்பவரை பார்த்து குறைத்தது. இதனால், ஆத்திரமடைந்த தகியா, நாயின் வாலை பிடித்து தூக்கி எரிந்தார். சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட ரக்ஷித், தகியா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில் தகியா தனது வீட்டிற்கு சென்று இரும்பு பைப் ஒன்றை எடுத்துவந்து, ரக்ஷித்தை தாக்கினார். இதனை தடுத்த ரக்ஷித்தின் தந்தை ஹேமந்த் என்பவருக்கும் அடி விழுந்தது. இதையடுத்து தகியா இரும்பு பைப்பை அங்கியே போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

  • Delhi |A man injured 3 members of a family in his neighbourhood in Paschim Vihar by hitting them with an iron rod allegedly after their pet dog barked at him. He also hit the dog & injured it

    Dog's owner says they filed complaint,FIR yet to be registered. Injured under treatment pic.twitter.com/Do0j4QmMVR

    — ANI (@ANI) July 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த பைப்பை ரக்ஷித் ஆதாரத்திற்காக தனது வீட்டில் வைத்துவிட்டு தந்தையுடன் போலீசில் புகார் அளிக்க சென்றார். இதனிடையே தகியா, ரக்ஷித் வீட்டிற்கு சென்று அந்த பைப்பை கேட்டு சண்டையிட்டார். அப்போது வீட்டிலிருந்த ரக்ஷித்தின் தாயார் ரேணு மறுக்கவே அவரையும் தகியா தாக்கினார். இதைத்தொடர்ந்து தன்னை நாய் கடித்துவிட்டதாக கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதனிடையே தகியா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், பிரிவு 308 (குற்றமில்லா கொலை செய்ய முயற்சி), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 451 (அத்துமீறல்) உள்ளிட்டவையின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடுக்கி மாவட்டத்தில் மண்சரிவு - பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.