கோழிக்கோடு: நீண்ட கூந்தல் கொண்டவரும் சரியாக மலையாளம் பேசக்கூட அறியாத, சந்திரன் என்கிற ஹிப்பி சந்திரன், இன்றும் கோழிக்கோடு இசை ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு மனிதராக இருக்கிறார்.
இந்த சந்திரன் சாதாரண வாத்தியம் வாசிப்பவர் அல்ல. அவர் ஒரே நேரத்தில் மவுத் ஆர்கன், கீபேட் மற்றும் கிடார் ஆகிய மூன்று கருவிகளை இயல்பாக வாசிக்கும் திறமை கொண்டவர். முன்னொரு காலத்தில், சர்க்கஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து சந்திரன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் வளர்த்துக் கொண்ட திறமை இது. மூன்று இசைக்கருவிகளையும் ஒன்றாக வாசிக்கும் திறமைக்காக, திரீ-இன்-ஒன் சந்திரன் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
சந்திரனின் கச்சேரிகள் ஒற்றை மனிதனின் சிம்பொனி எனவே வர்ணிக்கலாம். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, தனது இசை ஆர்வம் மூலம் கிடார் வாசிக்க மட்டுமின்றி, அதனை உருவாக்கவும் கற்றுக்கொண்டார், சந்திரன். 1970களில் தலைக்குப்பின்புறம் நீண்ட முடிவளர்க்கும் ஹிப்பி கலாசாரம் உலக ஆட்கொண்டபோது, சந்திரனும் தலைமுடியை வளர்க்கத்தவறவில்லை; பெல் பாட்டத்தை அணியாமல் விடவில்லை. இதனால்தான், எரஞ்சிப்பாலம் வடக்கஞ்ச்சேரி வயல் சி.கே. சந்திரன் என்னும் இவரது முழுப்பெயர் சுருங்கிப்போய், வாஞ்சையாக 'ஹிப்பி சந்திரன்’ ஆனது.
சந்திரன் ஒரு வெளிநாட்டவரிடமிருந்து கிடாரின் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டார். கிடார் கலைஞராக இருந்த டானி மோங், கோழிக்கோட்டில் உள்ள அவரது சகோதரரின் ஹார்மோனியம் பழுதுபார்க்கும் கடையில் சந்திரனுக்கு அறிமுகமானார். டானி மோங் கிடார் பாடங்களை சந்திரனுக்கு கற்பித்ததோடு, கிடாரினை உருவாக்கவும் கற்றுத்தந்தார்.
பின்னர் கோழிக்கோட்டில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களிலும், பல இசைக்குழுக்களிலும் முன்னணி கிடார் கலைஞராக இருந்தார்,சந்திரன். பின்னர் காலத்தின் ஓட்டத்தில் அமர் சர்க்கஸ் என்னும் நிறுவனத்தில் சேர்ந்தார். சந்திரனின் வாழ்க்கையில் அது மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது.
சர்க்கஸ் நிகழ்ச்சிகளின்போது, சந்திரன் ஒன்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கத் தொடங்கினார். பல மொழிகளில் கற்றுத்தேறினார். பின்னர் கிடார் வாசிக்கும் போது மௌத் ஆர்கனையும் தனது காலால் விசைப்பலகையை இயக்கக்கூடிய மற்றொரு இசை சாதனத்தை, தன் இசைத்தொழிலுக்காக வடிவமைத்துக்கொண்டார். அப்போதுதான் சந்திரன் 'திரீ-இன்-ஒன் சந்திரன்' ஆனார்.
போட்டிகள் அதிகரிக்கும்போது, குழந்தைகளுக்கு கிடார் வகுப்பு எடுப்பதிலும், கல்லூரி மாணவர்களுக்கு திறமையான பயிற்சியாளராகவும் அறியப்படுகிறார், சந்திரன்.
இதுகுறித்து சந்திரனிடம் கேட்டபோது, "எனது அண்ணன் ஹார்மோனியம் வாசிப்பார். பிறகு நான் அதில் என் விரல்களை வைத்து இசைக்க ஆரம்பித்தேன். நான் ஹார்மோனியத்தில் என் விரல்களை வைக்கும்போது, அது ஒரு தாளத்தை அளித்தது என்று என் சகோதரர்கள் சொல்வார்கள். அதுதான் எனது இசைப்பயணத்தின் ஆரம்பம்.
டானி மோங் கிடார் வாசிப்பவரும் தயாரிப்பாளரும் ஆவார். அவர் எனக்கு சி மற்றும் எஃப் குறியீடுகளை கற்றுக் கொடுத்தார். என் விரல்கள் வலிக்க ஆரம்பித்ததால் அந்த நேரத்தில் விளையாடுவது மிகவும் வேதனையாக இருந்தது. நான் தவறான நோட்டை வாசித்தால், அவர் வெளியே வந்து என்னிடம் சரியாக வாசிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பார்.
அவர் ஒரு ஹிந்தி பாடலை வாசித்தார், நானும் வைத்திருந்த நோட்ஸ்களை வைத்து சேர்த்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு கிடார் வாங்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார். பின், செகண்ட் ஹேண்டில் ஒரு கிடார் கிடைத்தது. பிறகு சினிமா பாடல்களை ஒற்றை சரத்தில் இசைக்க ஆரம்பித்தேன். உள்ளூர் நண்பர் ஒருவர் என்னை அமர் சர்க்கஸில் சேரச் சொன்னார். நான் ஜெய்ப்பூரில் சர்க்கஸில் சேர்ந்தேன். அவர்கள் என்னை மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க வைத்தார்கள், பின்னர் நான் அதை கற்றுக்கொண்டேன். நான் சர்க்கஸில் இருந்ததால் மூன்று கருவிகளையும் ஒன்றாக வாசிக்க கற்றுக்கொண்டேன்" என சொன்னார்.
அண்டை மாநிலத்துக்காரரின் திறமை நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.
இதையும் படிங்க: வரும் நவம்பர் 17 முதல் வாரணாசியில் தமிழ் விழா ஏற்பாடு - ஆயத்தப்பணிகள் தீவிரம்