ETV Bharat / bharat

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்.. பெங்களூரு மாணவர்கள் மீது வழக்கு!

பெங்களூருவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியதாக மூன்று கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Nov 19, 2022, 10:03 AM IST

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரு நகரில் உள்ள மாரத்ஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரிகள் இடையேயான கலை நிகழ்ச்சி கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பொறியியல் கல்லூரியின் பதிவாளர் மாரத்ஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மூவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 பிரிவு ஏ(மதம், இனம், பிறப்பிடம் ஆகியற்றின் மூலம் குழுக்களாக பகைமையை தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூன்று மாணவர்கள் வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், "கிட்டத்தட்ட 10 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு பெண் கோஷம் எழுப்புவதையும், 2 சிறுவர்கள் பின்னால் இருந்து தங்கள் குரலைச் சேர்ப்பதையும் காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை வேடிக்கைக்காகச் செய்ததாக எங்களிடம் கூறினர்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.