கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் இரும்பாலையில் நேற்று(பிப்.18) வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஐந்து தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள். இந்த விபத்திற்கு உயர் அலுவலர்களே காரணம் என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஐந்தாண்டுகளாக ஆலையில் எந்த ஒரு மேம்படுத்தும் பணியும் நடைபெறவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நியமனத்தின் போது போதிய பாதுகாப்பு பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. இதன்காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்கில் ரசாயனக் கசிவு: 60 பேர் பாதிப்பு