ETV Bharat / bharat

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நகைக்கடை வியாபாரிக்கு போலீஸ் காவல் - முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நகைக்கடை வியாபாரியை வரும் 20ஆம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையிலடைக்க மும்பை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Threat
Threat
author img

By

Published : Aug 16, 2022, 9:40 PM IST

Updated : Aug 16, 2022, 10:39 PM IST

மும்பை: மும்பையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு நேற்று(ஆக.15) தொலைபேசியில் அழைத்த நபர் ஒருவர், முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

சுமார் 9 முறை தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்தப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகைக்கடை வியாபாரி பிஷ்ணு விது பூமிக் (56) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதேநேரம் குற்றம்சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் கைதான பிஷ்ணு விது பூமிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நகைக்கடை வியாபாரியை வரும் 20ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:ஒமைக்ரான் தடுப்பூசி தயாரிப்பில் சீரம் மற்றும் நோவாவாக்ஸ்

Last Updated : Aug 16, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.