பெண் சாமியாரான பிரக்யா தாகூர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இருந்தும் அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. இதை பலரும் எதிர்த்த நிலையில் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். பாஜக எம்.பி பிரக்யா எதையாவது சர்ச்சையாக பேசி பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.
அந்த வகையில் நேற்று அவர், “ பிராமணர்களோ, ஷத்திரியர்களோ, வைசியர்களோ அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எண்ணாதபோது, சூத்திரர்கள் மட்டும் கோபப்படுவது ஏன்? “ எனப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், “ மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள் பாஜக எம்.பி பிரக்யா தாகூரின் பேச்சை கவனிக்கவும். இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி? மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்? “ என்று தெரிவித்துள்ளார்.
-
மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
பாஜக எம்.பி #ப்ரக்யா_தாகூரின் பேச்சைக்(படம்) கவனிக்கவும்.
இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி?
மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்? #manusmiriti #Bjp pic.twitter.com/25F21kSFEW
">மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 14, 2020
பாஜக எம்.பி #ப்ரக்யா_தாகூரின் பேச்சைக்(படம்) கவனிக்கவும்.
இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி?
மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்? #manusmiriti #Bjp pic.twitter.com/25F21kSFEWமனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 14, 2020
பாஜக எம்.பி #ப்ரக்யா_தாகூரின் பேச்சைக்(படம்) கவனிக்கவும்.
இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி?
மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்? #manusmiriti #Bjp pic.twitter.com/25F21kSFEW
அண்மையில் மனுநூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும் திருமாவளவனுக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் இருந்ததால் இப்பிரச்சனை பிசுபிசுத்து போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்மா மினி கிளீனிக் திட்டம்! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!