புதுச்சேரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகருக்கு நெல்லித்தோப்பு தொகுதிக்கு பதில் உருளையன்பேட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதரவாளர்களுடன் இன்று (மார்ச் 17) ஆலோசனை நடத்தினார். , கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நெல்லித்தோப்பு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய ஓம்சக்தி சேகர், உண்மைக்கு கிடைத்த விலை என்ன என்பதை தெரிந்து கொண்டதாக கூறினார்.
கட்சித் தலைமையின் ஆணையை ஏற்று உருளையன்பேட்டை தொகுதியில் நின்று நான் வெற்றி பெறுவேன். கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு 2006, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு, மீண்டும் இந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கட்சியில் இருந்து அகற்ற சதித்திட்டம் தீட்டி எனக்கு மாற்றுத் தொகுதியை ஒதுக்கி உள்ளனர்.
சதிகார கும்பல் என்னை வீழ்த்த சதி செய்து உள்ளது என்று கூறி கண்ணீர் வடித்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுப்பு? அதிமுக போட்டியிடும் இடங்கள் குறைப்பு... அடுத்தது என்ன?