இந்தூர் (மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எம்ஐஜி காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஷபீர் கான் என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகிய சில வருடங்களில் அவர், தனது மனைவியின் பெயரில் ஒரு குடியிருப்பை பதிவு செய்ய விரும்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது தாய் வீட்டில் அவரது மனைவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்தூரில் நடைபெற்று வரும் மேயர் தேர்தலில் வாக்களிப்பதற்காக, அவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குச்சீட்டைக் கேட்டு, கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கணவர், மூன்று முறை ‘தலாக்’ கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: துணையில்லா வாழ்வை தேர்வு செய்யும் இந்திய பெண்கள் - காரணம் தெரியுமா?