போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்டபோது, தோரை கிராம பஞ்சாயத்துடன் இணைக்கபடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடமாகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்துடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இதுகுறித்து உதய்புரா மக்கள் கூறுகையில், இதுவரை எங்கள் கிராமம் தோரை கிராம பஞ்சாயத்துடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத் திட்டங்களையும் நாங்கள் பெறமுடிவதில்லை.
இதற்கு முன் படித்த இளைஞர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு எழுதுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை. மதுசூதன்கர் நகராட்சியில் கேட்டால் பதிவு செய்யும் பணிகள் நடந்துவருவதாக கூறுகின்றனர். ஒரு வருடமாக நாங்கள் ஆதரவற்றவர்களாகிவிட்டோம். தனித்துவிடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர். இந்த கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "குழந்தைகளின் முகவரியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளில் சேர்க்கையை செய்ய முடியவில்லை என்றார். தோரை கிராம பஞ்சாயத்தின் மெத்தனப்போக்கு காரணமாகவே உதய்புரா கிராமம் அதிகாரப்பூர்வமாக பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ’அதிர்ஷ்டம் இப்டிதான் கதவ தட்டுமா..’ லாட்டரியில் அடித்த ரூ.30 கோடி..!