ETV Bharat / bharat

ஏனாம் பகுதி புறக்கணிக்கப்படுவதாக எம்எல்ஏ உண்ணாவிரதப்போராட்டம் - hunger strike

ஏனாம் பகுதி சுயேச்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், புதுச்சேரி சட்டமன்றத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏனாம் பகுதி புறக்கணிக்கப்படுவதாக எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டம்

author img

By

Published : Nov 7, 2022, 7:31 PM IST

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதி சுயேச்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், திடீரென புதுச்சேரி சட்டமன்றம் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் செய்தியாளரிடம் கூறுகையில், 'புதுச்சேரி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக நான் உள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏனாம் பகுதியில் எவ்வித வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. ஒரு சட்டமன்ற அலுவலகம்கூட கட்டித்தரவில்லை.

பொதுமக்களுக்கு சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எந்தவித அடிப்படை வசதிகளையும் என்னால் செய்து தர முடியவில்லை. இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் எவ்வித பணமும் இல்லை என்றுகூறி ஏனாம் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் ஏனாம் பகுதி வளர்ச்சியினை முழுமையாக தடுத்து நிறுத்துகிறார். ஏனாம் வளர்ச்சிப்பணிகளில் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் அமர்ந்திருப்பதாக ஏனாம் எம்எல்ஏ கொல்லபள்ளி அசோக் தெரிவித்துள்ளார்.

ஏனாம் பகுதி புறக்கணிக்கப்படுவதாக எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டம்

கடந்த மாதம் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் தொகுதியில் அடிப்படை வசதிகள் நடைபெறவில்லை என சட்டமன்றம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில்; மேலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.