ETV Bharat / bharat

தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது- ஜெய்ராம் ரமேஷ்! - தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது எனக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Jairam Ramesh
Jairam Ramesh
author img

By

Published : Mar 19, 2022, 3:24 PM IST

டெல்லி : காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அண்மையில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வரலாற்றை திரித்து வன்முறை மற்றும் கோபத்தை தூண்டுகிறது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “சில படங்கள் மாற்றத்தை தூண்டும். ஆனால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) வெறுப்பைத் தூண்டுகிறது. உண்மை நீதி, மறுவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உண்மைகளைத் திரிக்கிறது, வரலாற்றைத் திரித்து கோபத்தைத் தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Some films inspire change. Kashmir Files incites hate. Truth can lead to justice, rehabilitation, reconciliation & peace. Propaganda twists facts, distorts history to whip up anger & promote violence. Statesmen heal wounds. Pracharaks exploit fear and prejudice to divide & rule.

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) March 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மார்ச் 11ஆம் தேதி வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்தப் படம் ஒருசாரருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதாக எதிர்கருத்துகள் வெளியாகிவருகின்றன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் அனுபவம் கெர், மிதுன் சக்ரபோர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள இப்படம், 1990களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் மீதான இனப்படுகொலை குறித்து பேசுகிறது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன.

இதையும் படிங்க : வசூலில் பாகுபலியை நெருங்கி வரலாறு படைக்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.