உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அபூபுர் கிராமத்தில் வசிக்கும் சைலேந்திர குமார் மதுவுக்கு அடிமையானவர். இதனால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், குடிபோதையில் மனைவியுடன் சைலேந்திர குமார் தகராறு செய்துள்ளார். அப்போது அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) வாதாடியுள்ளார். இதனையடுத்து சண்டை தீவிரம் அடைந்த நிலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகளை சுட்டுக்கொன்ற சைலேந்திர குமார் அங்கிருந்து தப்பியோடினார்.
இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த தலைமறைவான சைலேந்திர குமார் தேடி வருகின்றனர்.