ETV Bharat / bharat

சரக்கு அடிச்சாதான் சாப்புடுவேன்... கொக்கரிக்கும் சேவலின் அட்ராசிட்டி - Cock Liquor drinking video

மகாராஷ்டிராவில் மது அருந்திய பிறகே உணவை உண்ணும் அதிசய சேவலை கட்டுப்படுத்த, அதன் உரிமையாளர் போராடி வரும் நிகழ்வு ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

முதலில் மது.. அடுத்துதான் உணவு.. கொக்கரிக்கும் சேவலின் அட்டகாசம்!

author img

By

Published : Jun 4, 2022, 10:59 PM IST

பண்டாரா நகருக்கு அருகில் உள்ள பிப்ரி மறுவாழ்வு கிராமத்தில் பாவ் கட்டோர் என்பவர் வசித்து வருகிறார். கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு வகையான கோழிகளை வளர்த்து வருகிறார். அதில், ஒரு சேவல் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சேவலால் தான் அனைவரும் சோகத்திலும் உள்ளனர்.

ஏனென்றால், இந்த சேவல் கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது. அது மட்டுமின்றி, இந்த சேவல் மது அருந்தாமல் தண்ணீர் அருந்தவோ, உணவு உண்ணவோ செய்யாது. இதனால், இந்த சேவலுக்கு மதுக்கடையில் இருந்து மது கொண்டு வந்து கொடுக்கிறார், உரிமையாளர். இதற்கான காரணம், கடந்த ஆண்டு இதற்கு நோய் தாக்கியது. எனவே, உண்ணுவதையும் மது அருந்துவதையும் சேவல் நிறுத்தியது.

முதலில் மது.. அடுத்துதான் உணவு.. கொக்கரிக்கும் சேவலின் அட்டகாசம்!

இதற்கிடையில், உள்ளூர்வாசி ஒருவரின் அறிவுரைப்படி, நோயிலிருந்து விடுபட, சில மாதங்களுக்கு உள்ளூர் மதுபான மொஹ்ஃபுலை சேவலுக்கு கொடுத்து வந்தனர். சில நாட்களுக்கு உள்ளூர் மது கிடைக்காததால், வெளிநாட்டு மதுவை கொடுக்கத் துவங்கினர். இதனால் சேவல் இந்த நோயிலிருந்து குணமாகிவிட்டது. ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டது.

இதனால், சேவலின் உரிமையாளர் பாவ் கட்டோர், மாதத்திற்கு 2,000 ரூபாய் வரை சேவலுக்கு மது வாங்க செலவு செய்கிறார். இந்நிலையில், சேவலின் மது பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், மது வாசனையுடன் கூடிய வைட்டமின் மருந்துகளை கொடுக்கத் தொடங்க வேண்டும் என்றும், படிப்படியாகக் குறைத்தால், சேவல் போதைப் பழக்கத்திலிருந்தும் குணமாகலாம் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தபால் நிலையத்தில் புகுந்த நாகப்பாம்பு:லாவகமாகப் பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.