புதுச்சேரி: புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் தமிழ் மாநில தலைவர் கடேஸ்வர சுப்ரமணியன், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில் சொத்துக்கள், அதன் வருமானங்களை இந்து அறநிலைத்துறை எடுத்து வருவதாகவும், கோவிலை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்றும், இந்து கோவில்களுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்
புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்களுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் கோவில் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் ,இதனை மீட்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், பெரும்பாலான கோவில் சொத்துக்களை திமுகவினரே ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், சிதம்பரம் கோவிலில் அரசு மிரட்டி ஆய்வு செய்ய கூடாது ,முறையாக நோட்டீஸ் அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்ஸை ஆசிர்வதிக்கும் மோடி, அமித்ஷா பேனரால் பரபரப்பு - பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமா...?