ETV Bharat / bharat

எம்எல்ஏவின் சகோதரரை கொலை செய்த வழக்கு... முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை! - life sentence for ex mla

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LIFE SENTENCE
ஆயுள்சிறை
author img

By

Published : Jun 5, 2023, 8:05 PM IST

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. ரவுடியாக இருந்த இவர், காங்கிரசில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், கடந்த 1996, 2002, 2007, 2012 மற்றும் 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இவர் 1991ம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் ராயின் சகோதரர் அவதேஷ் ராய் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு எம்.பி/எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அவனிஷ் கவுதம் தீர்ப்பை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தார்.

அதன்படி இன்று (ஜூன் 5) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ அஜய் ராய் கூறுகையில், “இந்த வழக்கில் தீர்ப்புக்காக பல ஆண்டுகளாக பொறுமையாக காத்திருந்தோம். இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக பல வழக்கறிஞர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என கூறினார்.

வழக்கின் பின்னணி: கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி வாரணாசி அருகே உள்ள லகுர்பிர் பகுதியில், அஜய் ராயின் வீட்டின் அருகே அவரது சகோதரர் அவதேஷ் ராய் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேனில் வந்த கும்பல், அவதேஷ் ராய் மீது சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முக்தார் அன்சாரி, பீம் சிங், கமலேஷ் சிங், முன்னாவ் பஜ்ரங்கி, முன்னாள் எம்எல்ஏ அப்துல் கலாம், ராகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகினர். முக்கிய குற்றவாளியான முக்தார் அன்சாரி மீதான வழக்கு மட்டும் வாரணாசி எம்.பி/எம்எல்ஏ நீதிமன்றத்தில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட பிறர் மீதான வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.

5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ள முக்தார் அன்சாரி மீது நில அபகரிப்பு, கொலை, மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு ஒன்றில், முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் ரத்து... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.