பெகுசராய் (பிகார்): பிகார் மாநிலம், பெகுசராய் பகுதியில் உள்ள கண்டக் ஆற்றின் பாலம் இன்று (டிச.18) காலை இடிந்து விழுந்தது. ரூ.13.43 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கட்டப்பட்ட சில ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், அது சரி செய்யப்படவில்லை. இந்தப் பாலம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில், அணுகு சாலை இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு பாலத்தின் இரண்டாவது, மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீரேந்திரா மற்றும் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இதற்கிடையில், பாலம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சஞ்சய் குமார் யாதவ் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், ’மேலும் இதில் பல அதிகாரிகள் பெரும் தொகையை சம்பாதித்துள்ளனர். பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்ததே அதற்கு உதாரணம். பாலம் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: U-19 World Cup: அமெரிக்க அணியா..? இந்திய பி டீமா..? குழம்பிப்போன ரசிகர்கள்