ETV Bharat / bharat

G20 Summit: ‘ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளாத அதிபர்களால் எந்த பாதிப்பும் இல்லை’ - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்! - ரஷ்ய அதிபர் புட்டின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எந்தவொரு நாட்டின் நிலைப்பாடும் அதை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களால் பிரதிபலிக்கப்படுகிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 7:53 PM IST

டெல்லி: டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில், "ஜி20 உச்சி மாநாடு நடந்த பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நிலைகளில் சில நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், அந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக அந்நாட்டின் நிலைப்பாடு மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

கரோனா, உக்ரைன் போர், காலநிலை மாற்றம், கடன், வடக்கு-தெற்குப் பிளவு மற்றும் கிழக்கு-மேற்கு துருவமுனைப்பு போன்ற கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து நாட்டு தலைவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா மிகவும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடும் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது; நிறைய நல்ல எண்ணங்களைக் கொண்டுள்ளது. ஆகையால், அனைவரும் மிகுந்த தீவிரத்துடன் இந்த மாநாட்டிற்கு வருகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், ஜி20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி புட்டினும், அதிபர் ஜியும் கலந்து கொள்ளாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேள்வி கேட்கப்பட்டது. “இதனால், இந்தியாவிற்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், ”என ஜெய்சங்கர் பதிலளித்தார். மேலும், “இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்துகொள்கிறார். உலக வங்கியை சீரமைப்பதில் அதிபர் பைடன் ஒருமித்த கவனம் செலுத்துவார். மின்னிலக்கமய பிரச்னைகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவை பற்றி விவாதிக்கலாம் என்று ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா கூறியுள்ளார்.

மின்னிலக்க நாணயச் சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஓர் உலகளாவிய ஏற்பாட்டு முறை பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (செ.4) அறிவித்தார். மேலும், ஜனாதிபதி புடின் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததை தெரிவித்தார். அதற்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் புடின் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து, உச்சி மாநாட்டின் முடிவில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “பிரச்னைகள் உள்ளன; அவை இன்று நடைபெறும் பிரச்னைகள் அல்ல. அதாவது எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரையிலான முழு கர்ப்ப காலம் உள்ளது போல, இந்த பிரச்னைகளை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அதற்கான தீர்வைக் கண்டுவருகின்றனர்.

"உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஜி20 மாநாட்டால் என்ன செய்ய முடியும் என்ற அடிப்படையில் இன்று உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஜி20 மாநாட்டின் மூலம் மிகவும் சிரமமான ஓர் உலகை சமாளிக்கும் சவாலை இந்தியா எதிர்நோக்கி உள்ளது. கரோனா பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், கடன் பிரச்னை, அரசியல் பிரச்னைகள் என்று இப்போதைய உலகம் மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உலகின் வேறு எந்த நாட்டின் தலைவரும், வளரும் நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எந்த நாடும், எங்களிடம் உங்களது கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் அதனை பகுத்தாய்ந்து அவற்றை ஜி20 முன்வைப்போம் என்று அழைக்கவில்லை. இது தனித்துவமான ஒன்று. இது இந்தியாவுக்கான பொறுப்பாக நான் பார்க்கிறேன்.

உலகம் மாறிவரும் இந்தக் கடினமான சூழலில் நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. எப்படி மக்களை ஒன்றிணைப்பது? என்பதில் அனைவருக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதனை எப்படி அனைவரையும் உணர வைப்பது என தெரியவில்லை. அதற்காகவும், இந்த உலகத்துக்கு சரியானதைச் செய்வதற்காகவும் இங்கே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் ‘இந்த’ 9 விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் - சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.