தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கினை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதால் சிபிஐக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை என்றும், பள்ளி மாணவி விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் தந்தை தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனு இன்று (மார்ச். 16) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: ரயில் பாதையில் வாக்கிங் செல்லும் யானைகள்