காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டில் நாட்டின் 161 காவல் மாவட்டங்கள், பயங்கரவாதத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 174ஆக இருந்த நிலையில் தற்போது 161ஆக குறைந்துள்ளது. இருப்பினும், 2021ஆம் ஆண்டிற்குள் பயங்கராவத செயல்பாடுகளை தீவிரமாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய்குமார் பல்லா அறிவுறுத்தியுள்ளார்.
அதிக பாதிப்புகளுடைய மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் ஜார்கண்ட் முதலிடத்திலும், பிகார் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அசாம் மூன்றாவது இடத்திலும், மணிப்பூர் நான்காவது இடத்திலும், ஒடிசா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் நடைமுறையை கொண்டு தடுப்பூசி விநியோகம்: ஹர்ஷ்வர்தன்