ETV Bharat / bharat

பயங்கரவாத நிதி வழக்கு: காஷ்மீரில் பலர் கைது - ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பலரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

NIA team
NIA team
author img

By

Published : Jul 11, 2021, 6:55 PM IST

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், ஸ்ரீநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை இன்று (ஜூலை 11) சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின்போது ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிராந்தியத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் வெளிநாட்டு சதிகாரர்களும் கூட்டு வைத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுடன், உளவுத்துறை, ரா அமைப்பு அலுவலர்களும் இவர்களை விசாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 11 அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: டெல்டா வைரஸுக்கு எதிராக 90% பாதுகாப்பு தரும் ஸ்புட்னிக் தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.