ETV Bharat / bharat

காரில் கோயிலுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி 10 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் காரில் கோயிலுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

கோயிலுக்கு சென்ற காரில் மின்சாரம் பாய்ந்ததில் 10 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Aug 1, 2022, 11:20 AM IST

கூச் பெஹார்: மேற்கு வங்கத்தில் உள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 யாத்ரீகர்கள் குழு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மாதபங்கா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அமித் வர்மா கூறியதாவது, ‘காரில் இருந்த ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம்’ என தெரிவித்தார்.

பின்னர் மயக்கமடைந்த அனைவரையும் சங்ரா பந்தா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, ​​10 பேர் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.