ஜம்மு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில், புலனாய்வு அமைப்பு SIA நடத்திய சோதனை குறித்த அறிக்கை, SIA வெளியிட்டுள்ளது. அதன்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பத்து இடங்களில் அமைப்பு நடத்திய அதிரடி சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள். இவர்கள் பயங்கரவாத அமைப்பின் கமான்டர்கள் அளிக்கும் உத்தரவின் பேரில் பயங்கரவாத, பிரிவினைவாத செயல்பாடுகளில் ஈடுபட முயன்றது தடுக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து செல்பேசிகள், டம்மி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். இவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் இளம் மேயருக்கும் இளம் எம்எல்ஏவுக்கும் 'டும் டும் டும்'