தொலைதொடர்பு துறையில் 5 ஜி சேவை வரயிருப்பதால், அனைத்து சாதனங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மத்திய அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது. இதற்கு டிஇஎம்ஏ (Tubular Exchanger Manufacturers Association) பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஇஎம்ஏ இன் தலைவர் ஸ்ரீ ரவி சர்மா கூறுகையில், “இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு தேவையான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை பயன்படுத்த, பராமரிக்க, மேம்படுத்த அனுமதிக்கும் முடிவு. இறுதி செய்யப்படும்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். எந்தவொரு "நம்பத்தகாத தயாரிப்பும்" நெட்வொர்க்கில் இருக்கும் வரை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இருக்கும். குறிப்பாக 5 ஜி சகாப்தத்தில், மில்லியன் கணக்கான ஐஓடி, எம் 2 எம் தயாரிப்புகள் இணைக்கப்படுகின்றன. இங்கிலாந்து, அமெரிக்காவில் "நம்பத்தகாத அனைத்து வகையான உபகரணங்களையும் மாற்றுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக யு.எஸ்.ஓ.எஃப் இல் இந்தியாவுக்கு போதுமான நிதி உள்ளது” என்றார்.
இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஆர். சந்திரசேகர் கூறுகையில், "எதிர்காலத்தில் நம்பகமான கருவிகளை மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துவது என்பது தொலை தொடர்பு உள்கட்டமைப்பை பாதுகாப்பதற்கான முக்கிய அம்சமாகும். அத்துடன், பி.எம்.பி / பி.எல்.ஐ திட்டங்களின் கீழ் தொலைதொடர்பு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கூடுதலாக 5 ஜியில் ஆர் அன்ட் டி ஐ அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.
டிஇஎம்ஏ இன் கவுன்சிலின் தலைவர் ஸ்ரீ அஜய் சங்கர் கூறுகையில், ”இது தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கான வரவேற்கத்தக்க மற்றும் அவசியமான நடவடிக்கை. தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் தனித்துவமான முன்னேற்றம் நம் வாழ்க்கையையும் உற்பத்தி திறனையும் மாற்றியுள்ளது. ஆனால் இது முன்னோடியில்லாத வகையில் அபாயங்களையும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது” என்றார்.