ஆந்திரா : சந்திரபாபு நாயுடு கட்சியின் “தெலுங்குதேசம் மகாநாடு” ஓன்கோல் பகுதியில் இரண்டு நாட்கள் நடந்தது. கட்சி மீது மரியாதையுடனும், நல்ல அபிமானத்துடனும் மகாநாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதே மரியாதையை நாமும் திரும்ப காட்ட வேண்டும் என சந்திரபாபு முடிவு செய்தார்.
இதனால் மகாநாடு என்ற பெயரில் கொண்டாடப்படும் இவ்விழாவில் விருந்தினர்கள், தொண்டர்கள், ஆர்வலர்கள், தலைவர்கள் என அனைவருக்கும் சுவையில் திருப்தி அளிக்கும் வகையில் உணவுகள் தயார் செய்தனர். விருந்தினர்களுக்கு தெலுங்கு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆந்திர உணவுகள் சமைக்கப்பட்டன.
முதல் நாள் கூட்டத்தில் 12,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு முற்றிலும் சைவ உணவுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டிருந்தாலும் யாருக்கும் பற்றாக்குறை இல்லாமல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கூடுதலாக வருபவர்களுக்கும் உணவு உடனுக்குடன் தயாரானது.
தாபேஸ்வரம் கஜா, ஓங்கோல் அல்லூரய்யா மைசூர் பாக்.... இப்படி கிட்டதட்ட 30 வகையான புகழ்பெற்ற இனிப்பு வகைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டன. இதற்காக விஜயவாடாவில் இருந்து சுமார் ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். மகாநாட்டின் முதல் நாளில் சுமார் 30,000 பேருக்கும், இரண்டாவது நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : அம்பாசிடர் 2.0...! வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...