ETV Bharat / bharat

குடும்பமா? கூகுளா? மைக்ரோசாஃப்ட் துணைத்தலைவரின் சாதனைப் பயணம்..!

பெண்களால் முடியுமா என்ற கேள்விக்கு ஒரு கை பார்த்துவிடுங்கள் என ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரியாகவும், மைக்ரோசாஃப்ட் நிறுவன துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்தான் இந்திய வம்சாவளியை சேர்ந் அபர்ணா சென்னபிரகதா (NRI Aparna Chennapragada) .

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:24 PM IST

அமெரிக்கா: உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வான்நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்த துறையில் பெண்களால் சாதிக்க முடியுமா? அல்லது சாதிக்க வேண்டாம் நிலைத்து நிற்கத்தான் முடியுமா? ஆண்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கே தலைமை தாங்கும் வகையிலோ வளர்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கேல்லாம். இதோ உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஒன்றை பதிலாக நான் இருக்கிறேன் என நிரூபித்துக்காட்டி இருக்கிறார் அபர்ணா சென்னபிரகதா.

தெலுங்கு வம்சாவளியை சேர்ந்த அபர்ணா சென்னபிரகதா இன்று சாதாரண பெண் அல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர். இந்திய பெண் உலகின் பிரபலமான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய தருணமாக இருக்கும் நிலையில் அவரின் சாதனை பயணம் எப்படி இருந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.

தெலுங்கு வம்சாவளியில் பிறந்த அபர்ணா சென்னபிரகதா பெரும் வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ஒன்றும் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். தனது பள்ளி பருவத்தை முடித்த அபர்ணா சென்னபிரகதா, சென்னை ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் அதற்கான தங்கள் முழு ஆதரவை வழங்கி அங்கு சேர்த்து படிக்க வைத்துள்ளனர். அங்கு கணினி அறிவியலில் பி.டெக். பின்னர், அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடியில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தனது வாழ்க்கை பயணத்தை இணையம் மற்றும் இணைய பாதுகாப்பு சேவைகளை வழங்கும் அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு இயங்கும் அகமாய் டெக்னாலஜிஸ் (Akamai Technologies) நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

தொடர்ந்து, கணினி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) மற்றும் இன்க் டாட் (inc dot) உள்ளிட்ட நிறுவனங்களில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த அபர்ணா சென்னபிரகதா, 12 வருடங்கள் அங்கு தனது வெற்றிகரமான பாதையை உருவாக்கியுள்ளார்.

யூடியூப், கூகுள் தேடல், கூகுள் நவ் மற்றும் கூகுள் லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவை தளங்களை உருவாக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். அது மட்டும் இன்றி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பல கட்டங்களை படிப்படியாக தாண்டி வந்த இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது அவரின் உழைப்புக்கான அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவர் வரும் நாட்களில், மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாஃப்ட் டிசைனர் ஆகியவற்றில் உருவாக்கப்படும் AI முயற்சிகளை வழிநடத்தவுள்ளார்.

இது குறித்து அபர்ணா சென்னபிரகதா கூறுகையில்; எனது 18 வயது வரை கணினியை நான் பார்த்தது கூட கிடையாது. சிறுவயதில் விளையாடிய வீடியோ கேம்கள் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. அது மட்டுமின்றி, எதிர்காலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு சொந்தமானதாகவே இருக்கும் என்ற அம்மாவின் வார்த்தை. இவைதான் என்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது என தனது குழந்தை பருவத்தை நினைவு கூர்ந்தார்.

மேலும், ''பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அடியெடுத்து வைத்தாலும்... நீண்ட காலம் நீடிக்க முடியாது, தலைமைப் பொறுப்புகளை ஏற்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருக்காது என்ற பேச்சுக்கள் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். துறைரீதியாக பெண்களுக்கு பெண்கள் ஆதரவாக இருப்பதோடு, உதவியாகவும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொழில் ரீதியாக உங்கள் கனவு மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வதில் பல சிக்கல்களும், கஷ்டங்களும் வரத்தான் செய்யும். அது இயல்பு..ஆனால் அதை கடந்து வெற்றிபெற துணியுங்கள் எனவும் அபர்ணா சென்னபிரகதா கூறியுள்ளார். எதற்காகவும் உங்கள் தொழிலை தியாகம் செய்யாமல் மாற்று வழி என்ன இருக்கிறது என்பதில் தேடுதல் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதனுடன் தனது வாழ்கையில் நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்தார்.

அப்போது, கூகுள் நிறுவனத்தில் நான் சேர்ந்த போது கர்ப்பமாக இருந்தேன். குடும்பமா அல்லது தொழிலா என்ற நடுநிலையான கேள்வியும், தயக்கமும் எனக்குள்ளும் எழுந்தது. அப்போது எனது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் அவர்களது வாழ்க்கை அனுபவத்தையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள். தொடர்ந்து பணிக்கு சென்றேன், குழந்தை பிறந்தவுடன், என் மகனை நிறுவனத்தின் டே கேர் சென்டரில் விட்டுவிட்டு வேலை பார்த்தேன். ஒரு சாதாரண தாய் உணரும் அத்தனை வலிகளையும் நானும் உணர்ந்தேன். அதன் பிறகு வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் ஒருங்கிணைத்து வாழும் யுக்தியை கற்றுக்கொண்டேன்.

என தனது தொழில் பயணத்தின் ஏற்ற தாழ்வுகள் பற்றி கூறும் அபர்ணா, படிப்படியாக தனது வாழ்க்கையை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டார். பெண்களால் முடியுமா என்ற கேள்விக்கு ஒரு கை பார்த்துவிடுங்கள் என்பதே என் பதில். என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை.. இஸ்ரேல் வாழ் இந்தியர் ஈடிவி பாரத்திற்கு பகிர்ந்த பரபரப்பு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.