ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதியன்று, ஹோலி கொண்டாட்டத்தில் தெலுங்கு நடிகை காயத்ரி தனது நண்பர் ரோகித்துடன் பங்கேற்றார்.
இந்த கொண்டாட்டத்தில் இருவரும் அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்ததும் இருவரும் காரில் கிளம்பியுள்ளனர். ரோகித் காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். ஹெச்.எம்.டி மலைப்பகுதியில் எல்லா மருத்துவமனை அருகே கார் சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது.
கார் மோதியதில் தடுப்பின் அருகே தோட்டவேலை செய்து கொண்டிருந்த 38 வயதான மகேஷ்வரியும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயத்ரியின் நண்பர் ரோகித், படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த செய்தியால் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் - அனைத்து இடங்களையும் கைப்பற்றிய பாண்டவர் அணி