நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகத்தில் தெலங்கானா மாநிலம் தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானாவில் 48.9 விழுக்காடு கரோனா தடுப்பூசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, டெல்லி 43.11 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.