தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் உள்ள பழைய நூலகத்தை 'புத்தக அலமாரி' போன்ற தோற்றத்தில் புதுப்பித்து பெருநகர மாநகராட்சி அசத்தியுள்ளது.
அந்த நூலகத்தின் கட்டடம், புத்தக அலமாரி அருகில் பெண் ஒருவர் புத்தகத்தை ஆர்வமாக வாசிப்பது போன்று உள்ளது. அதேபோல் உட்புற சுவர்களும் தனித்துவமான ஓவியங்களால் ரசிக்கும்படியாக வரையப்பட்டுள்ளது. ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
![தெலுங்கானா புத்தக அலமாரி தோற்ற நூலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12117188_book-telengana.jpg)
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே. தராகா ராமராவ் தனது ட்விட்டரில், "நூலகத்தின் புதுப்பிக்கப்பட்ட தோற்றம் அழகாக உள்ளது. இதை செய்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் இடமாற்றம்!