ETV Bharat / bharat

காலதாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக கூறி, தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காலதாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
காலதாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
author img

By

Published : Mar 2, 2023, 10:36 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சி.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா அரசின் தலைமைச் செயலாளர், தெலங்கானா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் 7 மசோதாக்கள் மற்றும் கடந்த மாதம் முதல் 3 மசோதாக்கள் என மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தெலங்கானா ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய சட்டத்துறையின் செயலாளர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவுக்கு மட்டும் அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

எனவே, இதில் நிறைவேற்றப்படாத 7 மசோதாக்கள் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் நடைபெற்ற 3 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தெலங்கானா பல்கலைக்கழகங்களின் கூட்டு நியமன வாரிய மசோதா, முலுகுவில் உள்ள வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை வனவியல் பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதா, அசாமாபாத் தொழில்துறை சட்ட மசோதா, நகராட்சி விதிமுறைகள் சட்டத் திருத்த மசோதா,

பொது பணியாளர்கள் சட்டம், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, மோட்டார் வாகனங்கள் மீதான வரி சட்டத்திருத்த மசோதா, நகராட்சி விதிமுறைகள் மசோதா, பஞ்சாயத்து சட்ட மசோதா மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என தற்போது மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் ஹிட்லரின் வாரிசாக செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.