ஹைதராபாத்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 கடந்துள்ளது. டெல்லி, ஆந்திரா, சண்டிகர், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிமாக உள்ளது. குறிப்பாக மாகாராஷ்டிராவில் 32 பேருக்கு தொற்று உள்ளது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு பேருக்கு இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அம்மாநில சுகாராத்துறை, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தீவிரமாக கவனித்துவருகிறோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியும், ஒமைக்ரான் பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்றுவருகிறது எனத் தெரிவிதுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 100ஐ கடந்த ஒமைக்ரான்