புதுச்சேரி: நாடு முழுவதும் இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குழந்தைகள் தின வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.
பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமலிருக்க இந்த சமூகம் பாதுகாப்பை வழங்க வேண்டுமென உறுதியேற்போம். புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுது செய்வோம். அனைவருக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தின கொண்டாட்டம் - பாதுகாப்பு பணியில் 27,000 வீரர்கள்