ETV Bharat / bharat

எம்.எம்.கீரவாணிக்கு தெலங்கானா அரசு குடியரசு தின விழாவில் கெளரவம்!

பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வரும் ‘நாட்டு நாட்டு’ பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு தெலங்கானா குடியரசு தின விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

இசையமைப்பாளர் கீரவாணிக்கு தெலங்கானா குடியரசு தின விழாவில் கெளரவம்!

author img

By

Published : Jan 26, 2023, 9:29 AM IST

ஹைதராபாத்: நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானா குடியரசு தின விழாவில், அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்குக் குடியரசு தின விழா மேடையில், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

  • Hyderabad | This achievement is not mine alone, its an achievement of all my mentors, brothers and supporters: MM Keeravani, Golden Globes award-winning & Oscars nominated 'Naatu Naatu' song's composer pic.twitter.com/GLc1qtGVAE

    — ANI (@ANI) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கீரவாணி, “எனது சாதனை எனக்கு மட்டுமே உரித்தானது அல்ல. என்னுடைய வழிகாட்டிகள், சகோதரர்கள் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே இத்தகைய சாதனையை நிகழ்த்த முடிந்தது” என்றார். இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் வெளியான ‘நாட்டு நாட்டு’ (ஆர்ஆர்ஆர்) பாடல், சமீபத்தில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றது. மேலும் ஆஸ்கர் விருதுகளின் இறுதி பரிந்துரைப் பட்டியலிலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 தமிழர்கள் உள்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.