ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சோனு (எ) சிவலோகேஷ்(14) பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்கிதருமாறு கேட்டுவந்தார். ஆனால், பெற்றோர் வாங்கித்தர மறுத்துவிட்டனர். இதனால் சிவலோகேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 20) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவலோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். அந்த வகையில் சிவலோகேஷின் நண்பர்களிடம் விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதாவாது, "சிவலோகேஷ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, தனது இன்ஸ்டாகிராம் பயோவில் இறப்பு தேதியை குறிப்பிட்டு, தூக்கிட்டு கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
தற்கொலையை கைவிடுங்கள்: சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சினேகா உதவி எண்களை அழையுங்கள். சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044-24640050.
இதையும் படிங்க: வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை!