ஐதராபாத் : பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இரவு எரவெள்ளியில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளதால் சிறிது காலத்திற்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பிலும், கேசிஆரின் மகன் கே.டி. ராமாராவ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சந்திரசேகர ராவை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் இருந்த கே.டி. ராமா ராவிடம், கே.சி.ஆரின் உடல் நலன் மற்றும் மருத்துவர் அறிக்கை குறித்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிரதிர் கட்சிகளாக இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சந்திரசேகர ராவை, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் மாண்பை நிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
-
కేసీఆర్ గారికి పరామర్శ..
— Revanth Reddy (@revanth_anumula) December 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
తుంటికి ఆపరేషన్ చేయించుకుని,
విశ్రాంతిలో ఉన్న మాజీ ముఖ్యమంత్రి కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు గారిని పరామర్శించి, యోగక్షేమాలను అడిగి తెలుసుకోవడం జరిగింది. pic.twitter.com/VZ3vL6EuA8
">కేసీఆర్ గారికి పరామర్శ..
— Revanth Reddy (@revanth_anumula) December 10, 2023
తుంటికి ఆపరేషన్ చేయించుకుని,
విశ్రాంతిలో ఉన్న మాజీ ముఖ్యమంత్రి కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు గారిని పరామర్శించి, యోగక్షేమాలను అడిగి తెలుసుకోవడం జరిగింది. pic.twitter.com/VZ3vL6EuA8కేసీఆర్ గారికి పరామర్శ..
— Revanth Reddy (@revanth_anumula) December 10, 2023
తుంటికి ఆపరేషన్ చేయించుకుని,
విశ్రాంతిలో ఉన్న మాజీ ముఖ్యమంత్రి కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు గారిని పరామర్శించి, యోగక్షేమాలను అడిగి తెలుసుకోవడం జరిగింది. pic.twitter.com/VZ3vL6EuA8
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்த பி.ஆர்.எஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கே.சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "ஊழல், சனாதன தர்ம வெறுப்பே இந்தியா கூட்டணி கட்சிகளிடையே உள்ள ஒற்றுமை" - அண்ணாமலை!