ETV Bharat / bharat

"நூறாண்டு காலம் வாழ்க".. மருத்துவமனையில் நடந்த திருமணம்.. நெகிழ்ச்சியில் தொடங்கிய வாழ்க்கை.. - Couple Marry in Hospital

தெலங்கானா மாநிலத்தில் திருமணத்தன்று மணமகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவமனையில் நடந்த திருமணம்
மருத்துவமனையில் நடந்த திருமணம்
author img

By

Published : Feb 24, 2023, 3:18 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் திருமணத்தன்று மணமகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், மனம் தளராத மணமகன் மருத்துவமனையிலேயே அவரை திருமணம் செய்துகொண்டார். மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் பகுதியை சேர்ந்த பனோத் ஷைலஜா என்பவருக்கும், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் பஸ்வராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் பிப்ரவரி 23ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாகவே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவந்த நிலையில், ஷைலஜாவுக்கு பிப்.22ஆம் தேதி திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மஞ்சேரியல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் கட்டி உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மணமகள் வீட்டார் திருமணத்தை சில வாரம் தள்ளிப்போட சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனடிப்படையில் அன்றே அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இவர் குணமடைய ஒரு வாரமாகும் அதுவரை திருமணத்தை நடத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனிடையே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் மணமகன் வீட்டாரிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், திருப்பதி ஷைலஜாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியுன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் அனுமதி பெற்று, அங்கேயே ஷைலஜாவுக்கு தாலி கட்சி திருமணத்தை முடித்தார். பெற்றோர்கள், மருத்துவர்கள், நெருங்கிய உறவினர்கள், சில நோயளிகளின் முன்னிலையில் இந்த நெகிழ்ச்சியான திருமணம் நடந்து முடிந்தது. இருவரையும் நூறாண்டு காலம் வாழ்க என்று அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இப்போது, ஷைலஜா குணமடைந்து வீடு திரும்பும்வரை திருப்பதி ஒரு கணவாக அவருடனே இருந்து கவனித்துக்கொள்ள உள்ளார். இப்படியொரு திருமணம் நடந்ததுள்ளது என்பதை அறிந்த மஞ்சேரி மாவட்ட மக்களில் பலர் நேரடியாக மருத்துமனைக்கு சென்று ஷைலஜாவை நலம் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 'எல்லா ஊரும் எங்க ஊர்தான் பாஸ்: பேருந்தில் உலகை சுற்றும் ஜெர்மன் தம்பதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.