ETV Bharat / bharat

விமானத்தின் அவசர கதவு விவகாரம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

விமானத்தின் அவசர கதவை கர்நாடக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்தார் என்பது உண்மைதான் என சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

விமானத்தின் அவசர கதவு விவகாரம்: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம்!

author img

By

Published : Feb 11, 2023, 8:58 AM IST

டெல்லி: கடந்த ஆண்டு சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், தெற்கு பெங்களூரு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் அவசர கதவை திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதனை நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாதங்களாக முன்வைத்தன. இதற்கு பதிலளித்து பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் சமர்பித்த அறிக்கையின்படி, கடந்த 2022 டிசம்பர் 10 அன்று தேஜஸ்வி சூர்யா 6E-7339 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர், விமானத்தின் அவசர கதவை தவறுதலாக திறந்துள்ளார். இந்த சம்பவம் விமானம் புறப்படுவதற்கு முன்னரே நடைபெற்றுள்ளது. எனவே தேஜஸ்வி சூர்யா விமான போக்குவரத்து விதிகளை மீறவில்லை” என்றார். முன்னதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிண்டிகா, விமானத்தின் அவசர கதவை ஒரு பயணி தவறுதலாக திறந்ததாகவும், அதற்காக அந்த பயணி முறையாக மன்னிப்பு கோரியதாகவும் மறைமுகமாக கூறினார் எனபது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமான அவசர கால கதவு.. எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.