உத்தரப் பிரதேசம்: முசாபர் நகரில் ஜூலை 23ஆம் தேதி இரவு துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த சகோதரனுக்கு முன்னால் 15 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை காணொலியாகப் பதிவு செய்து, வெளியில் தெரிவித்தால் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவதாகவும் மிரட்டி அனுப்பி உள்ளனர். அதைத்தொடர்ந்து சிறுமியின் சகோதரன் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
உடனே பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி மாணவி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது