டெல்லி: கிழக்கு டெல்லியிலுள்ள வெல்கம் காலணி பகுதியில் நவம்பர் 21ஆம் தேதி பிரயாணி வாங்கப் பணம் தர மறுத்ததால் 17 வயது சிறுவனை 16 வயது சிறுவன் நவம்பர் 21ஆம் தேதி இரவு கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல் துறையினர் தெரிவிக்கும் போது இது சம்பந்தமாக 2.23 நிமிட சிசிடிவி காட்சிகளில் கொலை செய்த 16 வயது சிறுவன் முதலில் 17 வயது சிறுவனை கழுத்தை நெரித்து மயக்கம் அடையச் செய்து பின் நடனமாடிய படி 55 முறை கத்தியால் குத்தியுள்ளான் இந்த சிசிடிவி திகிலூட்டும் படி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலை குறித்து விசாரணை அதிகாரி தெரிவிக்கும் போது, "கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மற்றொரு சிறுவனைக் குறுகிய தெருவில் இழுத்துச் சென்று கத்தியால் குத்துகிறார் மேலும் நடனமாடுகிறார் அருகிலுள்ள வீட்டினர் கதவைத் திறக்கும் போது கத்தியைக் காட்சி மிரட்டியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு துணை காவல் ஆணையர் ஜாய் டிர்கி கூறும் போது, "இந்த கொலை சம்பவம் நவம்பர் 21ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் நடைபெற்றுள்ளது. மேலும், கொலைக்குக் காரணமான 16 வயது சிறுவனை நேற்று (நவ.22) காலை கைது செய்துள்ளோம். குற்றவாளி கொலைக்காகப் பயன்படுத்திய கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்." எனக் கூறியுள்ளார்.
பிரியாணி வாங்கப் பணம் தர மறுத்தால் இப்பிரச்சனை தொடங்கியுள்ளது. வாய்த் தகராறு ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் 17 வயது சிறுவனை முதலில் மூச்சுத் திணறடித்து மயக்கம் அடையச் செய்து குறுகிய தெருவில் இழுத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். தொடர்ந்து, 55 முறை கத்தியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் நடனமாடியுள்ளார். அருகிலிருந்தவர்கள் தங்க வீட்டின் கதவைத் திறக்க முயன்ற போது அவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், சிறுவனைக் கத்தியால் தாக்கிவிட்டு அவரது தலை முடியைப் பிடித்து இழுத்து வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவனிடமிருந்து ரூ.350 எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். தற்போது, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கொலை பதிவாகியுள்ள சிசிடிவி திகிலூட்டு விதமாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாசியில் 12 நாட்களாக தொடரும் மீட்புப் பணி.. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்!