ETV Bharat / bharat

வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்?: தமிழ்நாட்டுக்கு விரைகிறது பீகார் அதிகாரிகள் குழு!

தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் குழு விரைகிறது
பீகார் குழு விரைகிறது
author img

By

Published : Mar 3, 2023, 8:55 PM IST

பாட்னா: தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வர்த்தக நகரங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பெரும்பாலும் பீகாரை சேர்ந்த வடமாநில இளைஞர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். வடமாநிலத்தவர்களால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என பரவலாக கருத்து எழுந்துள்ளது.

இதற்கிடையே, பீகார் மாநில தொழிலாளர்களை, தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தாக்குவதாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இது பீகார் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் பீகார் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. சட்டமன்றம் இன்று (மார்ச் 3) கூடியதும், அமளியில் ஈடுபட்ட பாஜகவினர், பீகார் இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பக்கோரி போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தமிழ்நாடு டிஜிபி மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பாஜக குற்றம்சாட்டுகிறது" என்றார்.

இதற்கிடையே தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வெளியான 2 வீடியோக்களும் போலியானவை. அந்த இரண்டு தாக்குதல்களும் திருப்பூர் மற்றும் கோவையில் நடந்தது. அவை இரண்டும் தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே நடந்தவை அல்ல. ஒரு வீடியோவில் இருப்பது வடமாநிலங்களைச் சேர்ந்த இருபிரிவு தொழிலாளர்கள் இடையேயானது. மற்றொன்று, கோவையைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்" எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்ஹா சந்தித்துப் பேசினார். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். டிஜிபி ஆர்.எஸ்.பாட்டி மற்றும் தலைமைச்செயலாளரை அழைத்த முதலமைச்சர், தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் குழுவை நாளை (மார்ச் 4) அனுப்ப உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு திரும்பி வர விரும்பும் தொழிலாளர்களை, அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் உறுதி அளித்துள்ளார்" எனக் கூறினார்.

இதற்கிடையே, திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், ரயில் தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்போன் மற்றும் உடைமைகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்ததாக ரயில் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை" - தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.