ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் குழுமத்தின் கொள்கைகளுக்கு அங்கீகாரம் - ரத்தன் டாடா - டாடா குழுமம்

டெல்லி: மிஸ்திரியை நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் டாடா குழுமத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா
author img

By

Published : Mar 26, 2021, 9:41 PM IST

டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அக்குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உப்பு தொடங்கி மென்பொருள் வரை அனைத்துத் தொழில்களிலும் தடம்பதித்துள்ள டாடா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. 2012ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவை தொடர்ந்து நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார்.

ஆனால், 2016ஆம் ஆண்டு, நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அவரின் பதவி பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமித்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து டாடா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மிஸ்திரியின் சொந்த நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், "மிஸ்திரியை நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது. பெருநிறுவன நிர்வாகத்தின் கொள்கைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன" என நீதிமன்றத்தில் வாதாடியது.

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும்விதமாக வாதாடிய டாடா குழுமம், மிஸ்திரியை நீக்குவதற்கான உரிமை நிர்வாகக் குழுவுக்கு உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இரண்டு தரப்பின் வாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, சட்டத்தின்படி டாடா குழுமத்திற்குச் சாதகமாகவே வழக்கு உள்ளது எனத் தெரிவித்தது.

அதேபோல், சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. தீர்ப்பு குறித்து கருத்து ரத்தன் டாடா ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பைப் பாராட்டுகிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியா, தோல்வியா? என்பது முக்கியம் அல்ல.

எனது நேர்மை, குழுமத்தின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட தொடர் தாக்குதலுக்குப் பின்பும், குழுமத்தின் விழுமியங்கள், நெறிமுறைகள் ஆகியவை இத்தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளன; அவற்றிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளன. நேர்மைக்கும் நியாயத்திற்கும் நீதித் துறை வலுசேர்த்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.